இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் வேலைவாய்ப்பு - அண்ணாமலை டுவீட்

75,000 இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2022-10-21 03:54 GMT

சென்னை,

நமது நாட்டிற்கு சேவை செய்யக் காத்திருக்கும் 75,000 இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்த ஆண்டு ஜூன் மாதம், நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி 18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கினார்.

நமது நாட்டிற்கு சேவை செய்யக் காத்திருக்கும் 75,000 இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது" என்று கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்