தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Update: 2022-10-21 02:53 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகை வரும் 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட வெளியூர், வெளிமாநிலங்களில் உள்ள பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு (22, 23-ந்தேதி) விடுமுறை நாட்களாகும்.

திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் வருகிற 23-ந்தேதி வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.

சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,218 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தம் 10,518 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16,888 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையில் தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 3,062 சிறப்பு பஸ்களும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,790 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 13,152 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

தீபாவளிக்கு முன்பு தினமும் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை வருமாறு:-

இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து 1437 சிறப்பு பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1765 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். 22-ந் தேதி (சனிக்கிழமை) வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்கள் இயக்கப்படுகிறது.

மேலும் சென்னையில் இருந்து 1586 சிறப்பு பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 2620 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து 1195 சிறப்பு பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1985 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். 3 நாட்களும் வழக்கமாக இயக்கப்படும் 6, 300 பஸ்கள், 10,588 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 16,888 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளிக்கு பிறகு தினமும் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை வருமாறு:-

வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) வழக்கமான 2100 பஸ்கள் இயக்கப்படும். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 530 சிறப்பு பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 580 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வழக்கமான 2100 பஸ்கள் இயக்கப்படும்.

மேலும் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 1678 சிறப்பு பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 2080 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். வருகிற 26-ந் தேதி (புதன் கிழமை) வழக்கமான 2100 பஸ்கள் இயக்கப்படும். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 854 சிறப்பு பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 1130 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். இந்த 3 நாட்களும் வழக்கமாக இயக்கப்படும் 6300 பஸ்கள், 6852 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 13,152 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்