அரசு கல்லூரியில் பிரிவு உபசார விழா

வேதாரண்யம் அரசு கல்லூரியில் பிரிவு உபசார விழா

Update: 2023-04-30 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் பிரிவு உபசார விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் குமரேசமூர்த்தி தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவி மருவரசி வரவேற்றார். நிகழ்ச்சியில் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பசுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், மாணவிகள் கல்லூரிக்கு வந்து செல்லும்போது தங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தைரியமாக போலீஸ் துறையிடமோ அல்லது பெற்றோரிடமோ தெரிவிக்க வேண்டும். வாழ்க்கைக்கு படிப்பு மட்டும் போதாது, நிறைய அனுபவங்களும் தேவை. அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற உதவியாக இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் அறிவுடை செல்வன், ராஜா மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி இறுதி ஆண்டு மாணவி விஜயராணி நன்றி கூறினார். முடிவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்