ஓட்டலில் தகராறு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கைது

உளுந்தூர்பேட்டை ஓட்டலில் தகராறில் ஈடுபட்ட இ்ந்து முன்னணி கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-09-03 17:43 GMT

உளுந்தூர்பேட்டை

தனியார் ஓட்டல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் சுரேஷ்(வயது 33). இவர் இந்து முன்னணியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளான ஒலையனூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் அஜய்(30), கீரனூர் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் மோகன்(24) ஆகிய 3 பேரும் உளுந்தூர்பேட்டை ரவுண்டானா பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் சாப்பிட சென்றனர். அங்கு அவர்கள் சிக்கன் நூடுல்ஸ் மற்றும் சிக்கன் தந்தூரி ஆகியவற்றை சாப்பிட்டனர்.

கொலை மிரட்டல்

உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் அவர்கள் பில் கொடுத்து விட்டு வெளியே வரும்போது ஓட்டல் ஊழியர்களிடம் உணவு தரமாக இல்லை எனவும் உங்கள் ஓட்டலின் உரிமத்தை காண்பிக்குமாறும் கேட்டுள்ளனர்.

இதையடுத்து ஓட்டல் நிர்வாகி கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த அன்சர்(23) ஓட்டல் உரிமத்தை எடுத்து அவர்களிடம் காண்பித்தார். அதை பார்த்த சுரேஷ் காலாவதியான உரிமத்தை வைத்துள்ளீர்கள் என கூறி ஓட்டல் நிர்வாகி மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

3 பேர் கைது

பின்னர் இது குறித்து ஓட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் சேகர் உள்பட 3 பேரையும் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்