மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
லத்தேரி பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு ெசய்தார்.;
கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கல் அடுத்த ஒழையாத்தூர் கிராமம், கீழ்முட்டுக்கூர் ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் பட்டா வழங்கப்பட்டது. அதில் காலியாக உள்ளவற்றில் பயனாளிகளை தேர்வு செய்வதற்கான ஆய்வு நடைபெற்றது. மேலும் லத்தேரியில் பட்டாசு உரிமம் கோரிய கடைகளை மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஆய்வு செய்தார். ஆய்வுகளின் போது, கே.வி.குப்பம் தாசில்தார் டி.கலைவாணி, மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், வருவாய் ஆய்வாளர் லட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் தமிழ்வாணன், கிராம உதவியாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.