திருவண்ணாமலையில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
திருவண்ணாமலையில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை காந்திநகரில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சிக்குழுவின் 15-வது சாதாரண குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் அறவாழி வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் இல.பாண்டியன், சாந்திகண்ணன், ஞானசௌந்தரி ஆறுமுகம், சுஜாதா தவமணி, செந்தில்குமார், முத்துக்குமார், சுப்பிரமணி, முருகேசன், முத்துசெல்வம், அரவிந்தன், மாவட்ட ஊராட்சி உதவியாளர் சுந்தரமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பரிமேலழகன் நன்றி கூறினார்.