மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

திண்டுக்கல்லில், மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-09-06 16:04 GMT

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம், ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் கிரி வரவேற்றார். இதில் மாவட்ட கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் செலவினம் உள்பட பல்வேறு பொருள் தொடர்பான 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாவட்ட ஊராட்சிக்குழு மூலம் ஒதுக்கப்பட்ட பணிகளை, நிலுவை இல்லாமல் விரைந்து முடிக்கும்படி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அந்தந்த துறை சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்