மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

விழுப்புரத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-07-04 15:03 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழுவின் சாதாரண கூட்டம் நேற்று காலை மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், ஊராட்சிக்குழு செயலாளர் குருசாமி, கண்காணிப்பாளர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார், வனிதாஅரிராமன், தமிழ்ச்செல்வி கேசவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் செயலாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட 7 பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் ஆகிய 2 பணியிடத்தை நிரப்பிட ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் மூலம் அரசுக்கு முன்மொழிவு அனுப்புவது, மத்திய அரசின் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் பணிகள் தேர்வு செய்வதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி ஆகிய 3-க்கும் ஒரே நெறிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் இதனை தனித்தனியாக பிரித்து மாவட்ட ஊராட்சிக்கு பெரிய அளவிலான பணிகளை ஒதுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைப்பது. இதற்காக 3 அடுக்கு ஊராட்சி கூட்டத்தை நடத்தி அவரவர் நிதிக்கேற்ப பணிகளை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது என கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்