இறகுப்பந்து போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த வட்டாட்சியர் மாரடைப்பால் மரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இறகுப்பந்து போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்த வட்டாட்சியர் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்த வட்டாட்சியர் அதியமான் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் அதியமான் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
வட்டாட்சியர் அதியமானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.