மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

அரியலூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.;

Update: 2023-10-12 19:43 GMT

அரியலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 6-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருவாய் குறுவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பெண்களுக்கான கபடி, கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் நடந்தன. 11, 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு தனித்தனியாக இந்த போட்டிகள் நடைபெற்றன. இதில் கபடி போட்டியில், 14 வயது பிரிவில் அழகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும், 17 வயது பிரிவில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி பள்ளியும், 19 வயது பிரிவில் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியும் முதல் இடத்தை பெற்றன. அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவிகள் அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் தலைமையில், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், ரவி, திருமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) மாணவர்களுக்கான கோ-கோ, வாலிபால், டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்