மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி: பெருங்குளம் பள்ளி மாணவி சாதனை

தூத்துக்குடி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் பெருங்குளம் பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.

Update: 2023-07-28 18:45 GMT

ஏரல்:

தமிழ் வளர்ச்சி துறையால் தூத்துக்குடியில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் பெருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி நாகஜோதி 2-வது இடம் பிடித்தார். மாணவிக்கு மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ரூ.7 ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவியை ஸ்ரீவைகுண்டம் வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயபாலன்துரைராஜ், பாலசுந்தரி, பள்ளி தலைமை ஆசிரியை பொன்ராணி மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் சங்கத்தினர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்