திருச்சியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி
திருச்சியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.;
திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது. கராத்தே இந்தியா ஆர்கநேசன் மற்றும் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருச்சி மாவட்ட கராத்தே சங்கம் (டுகாட்) சார்பில் நடந்த இந்த போட்டியில் சப்-ஜுனியர், கேடட், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 400 பேர் கலந்து கொண்டனர். போட்டிகளை மாவட்ட தலைவர் இளஞ்செழியன், செயலாளர் கேவியர் டேவிட், பொருளாளர் ஸ்டாலின் மான்போர்ட், சர்வதேச நடுவர் காளீசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியின் நடுவர்களாக சசிகுமார், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் செயல்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.