மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டி

சிவகாசியில் மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டி நடைபெற்றது.;

Update: 2022-07-22 19:36 GMT

சிவகாசி,

விருதுநகர் மாவட்ட ஹேண்ட்பால் கழகம் மற்றும் ரோட்டரி கிளப் சிவகாசி கிரீன்ஸ்இணைந்து விருதுநகர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டி சிவகாசியில் நடைபெற்றது. இதில் சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவில் 14 அணிகளும், மாணவிகள் பிரிவில் 12 அணிகளும் மோதின. விழாவில் விருதுநகர் மாவட்ட ஹேண்ட்பால் கழகத்தின் தலைவர் சண்முகநாதன், ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி கிரீன்ஸ் தலைவர் சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். போட்டிகளை ரோட்டரிதலைவர் ஆறுமுகசெல்வம், ஹேண்ட்பால் பயிற்றுனர் குமரேசன், ஜேசீஸ்பள்ளி முதல்வர் சித்ராஜெயந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாணவர்கள் பிரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ். இந்து மேல்நிலைப்பள்ளி முதலிடமும், ராஜபாளையம் ஆனந்தவித்யாலயா பள்ளி 2-வது இடமும், மாணவிகள் பிரிவில் ராஜபாளையம் சின்மயா பள்ளி முதலிடமும், சிவகாசி ஒய்.ஆர்.டி.வி. பள்ளி 2-வது இடமும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட ரோட்டரி தலைவர் அருள்செழியன், விஜயபிரதாப் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ரோட்டரி கிரீன்ஸ் செயலாளர் சையது முகமதுஆரிப், திட்டதலைவர் முகமது இம்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட ஹேண்ட்பால் கழகத்தின் செயலாளர் சரவணபிரகாஷ் செய்திருந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்