ஸ்ரீவைகுண்டத்தில்மாவட்ட அளவிலான மாணவிகள் கபடி போட்டி

ஸ்ரீவைகுண்டத்தில்மாவட்ட அளவிலான மாணவிகள் கபடி போட்டி நடந்தது.;

Update: 2022-11-10 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மண்டல அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகளுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டி ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. போட்டியை பள்ளி கல்வி அபிவிருத்தி சங்க செயலாளர் கோட்டை சண்முகநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி செயலாளர் முத்தையா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகச்செல்வன், துணைத்தலைவர் ராஜப்பாவெங்கடாச்சாரி, தலைமையாசிரியர் முத்துசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் முருகன் வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி போட்டிகளை கண்காணித்தார். மாவட்ட அளவில் 14, 17, 19வயதிற்குட்பட்டோர் என்ற ரீதியில் நடைபெற்ற இப்போட்டியில் மாணவர் பிரிவில் 24 அணிகளும், மாணவியர் பிரிவில் 24அணிகளும் என மொத்தம் 48அணிகள் பங்கேற்றன. முதற்கட்டமாக மாணவியர்களுக்கான போட்டி நடந்தது. இதில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கடம்பூர் இந்துநாடார் மேல்நிலைப்பள்ளி அணியும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கோவில்பட்டி கம்மவர் மேல்நிலைப்பள்ளி அணியும், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் புன்னக்காயல் செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளி அணியும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில், உடற்கல்வி ஆசிரியர்கள் அசோக்குமார், காசிராஜன், செல்வம், சாந்தா மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பயிற்சியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கான போட்டிகள் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்