மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-09 18:15 GMT

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, குழந்தைகள் தொடர்புடைய துறை தலைவர்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் காலமுறைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு அனைத்து துறைத்தலைவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் கிராம அளவிலான, ஒன்றிய அளவிலான, நகர பஞ்சாயத்து அளவிலான மற்றும் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று துறைத்தலைவர்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கூடுதல் மாவட்ட நீதிமன்ற நடுவர் பாபுலால், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெரினா பேகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்