தேனியில் சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. வயது வாரியாக 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி தலைவரும், தமிழ்நாடு செஸ் கழக நடுவருமான சையது மைதீன் மற்றும் பலர் செய்திருந்தனர்.