மாவட்ட அளவிலான தடகள போட்டி
காட்பாடியில் மாவட்ட அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு வேலூர் தடகள அறக்கட்டளை சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தடகளப் போட்டிகள் நடந்தது.
10 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு 60 மீட்டர் ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், நின்றபடி குதித்தல் ஆகிய போட்டிகளும், 12 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 80 மீட்டர் ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளும், 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 600 மீட்டர், 100 மீட்டர் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், பந்து எறிதல் ஆகிய போட்டிகளும் நடந்தது.
10 வயதுக்குட்பட்டோருக்கான 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஐடாஸ்கடர் பள்ளி மாணவி மஹதிக்கு முதல் பரிசும், கங்காதரா பள்ளி மாணவி ஹரிணிக்கு 2-வது பரிசும், உதயம் பள்ளி மாணவி ரோகினிக்கு மூன்றாவது பரிசும் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.