மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி தொடக்கம்

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி தொடக்கம்

Update: 2022-12-07 20:40 GMT

தஞ்சாவூரில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை நடைபெறுகிறது

கலைத்திருவிழா

மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்துவதற்காக அரசு பள்ளி மாணவ--மாணவிகள் பயன்பெறும் வகையில் வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகின்றன.

பல்வேறு போட்டிகள்

இந்தநிலையில் வட்டார அளவில் போட்டிகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, தஞ்சாவூர் மேம்பாலம் அருகேயுள்ள தீர்க்க சுமங்கலி மஹால், தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, யாகப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று தொடங்கியது. போட்டியை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கிராமிய நடனம், செவ்வியல் நடனம், நடனக்குழு, நாட்டுப்புற நடனம், கரகாட்டம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.

12-ந்தேதி வரை

கலை திருவிழா வருகிற 12-ந்தேதி(திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது. போட்டிகளில் 1,492 மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.. இவற்றில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்