மாவட்ட அளவிலான கலைத்திருவிழா

மயிலாடுதுறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நடந்தது

Update: 2022-12-10 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் நடந்தது. இதில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய வட்டாரங்களில் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான கலை திருவிழா மயிலாடுதுறையில் நடந்தது. தொடக்க விழாவிற்கு நகர சபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் சிவதாஸ் முன்னிலை வகித்தார்.. மாவட்ட கல்வி அலுவலர் தியாகராஜன் வரவேற்று பேசினார். இதில் எம்.எல்.ஏ., க்கள் ராஜகுமார், சீர்காழி பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கலைப் போட்டிகளை தொடங்கி வைத்தனர். போட்டியில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கவின்கலை, நாடகம், தனித்திறன் உள்ளிட்ட 6 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் அரசு பள்ளி

ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் ஞானசேகர் நன்றி கூறினார். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்