மாவட்ட உயர் மட்டக்குழு கூட்டம்:வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவு

வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

Update: 2023-09-05 22:03 GMT

வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

உயர் மட்டக்குழு கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளுக்கான உயர்மட்டக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ச.சந்தோஷினி சந்திரா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் கலெக்டர் டாக்டர் மனிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், கல்வித்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கலெக்டர் உத்தரவு

கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசும்போது, 'ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சித்திட்ட பணிகளையும் அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்' என்று உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கா.செல்வராஜன் (வளர்ச்சி), ஆர்.டி.ஓ.க்கள் சதீஸ்குமார் (ஈரோடு), திவ்ய பிரியதர்ஷினி (கோபி), மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்