நாகையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

நாகையில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

Update: 2022-09-29 18:45 GMT

நாகையில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு தலைவர் செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். இணைத்தலைவர் ராமலிங்கம் எம்.பி., நாகை கலெக்டர் அருண்தம்புராஜ், மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நாகைமாலி, ராஜகுமார், பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் இந்த கூட்டத்தில், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்கள், தொகுதி ஒதுக்கீடு ஆகியவை செம்மையாக செய்யப்படுகிறதா, மக்களிடையே எந்த அளவுக்கு திட்டங்கள் சென்று சேர்கிறது என்பது குறித்து தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலர்களிடம் விவாதிக்கப்பட்டது.

நலத்திட்ட உதவி

முன்னதாக 43 பயனாளிகளுக்கு ரூ.45 லட்சத்து 29 ஆயிரத்து 695 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஷகிலா, முருகதாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்கள் பெரியசாமி, முருகண்ணன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்