மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு,கண்காணிப்பு குழு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ராமலிங்கம் எம்.பி. தலைமையில் நடந்தது.

Update: 2023-06-18 18:45 GMT


மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ராமலிங்கம் எம்.பி. தலைமையில் நடந்தது.

கண்காணிப்பு குழு கூட்டம்

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ராமலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மகாபாரதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டங்களின்கீழ் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி அவாஸ்யோஜனா, தீனதயாள் அந்தோதயா யோஜனா, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ரெயில்வே, நெடுஞ்சாலை, சுகம்யா பாரத் அபியான் உள்ளிட்ட பல்வேறு திட்ட செயலாக்கங்கள் குறித்து, கண்காணிப்புக் குழுவின் தலைவர் ராமலிங்கம் எம்.பி., துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

என்னென்ன நடவடிக்கைகள்

மேலும், ஒவ்வொரு திட்டத்தின்கீழ் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு மக்கள் பயன்பெற்றுள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்தார். கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் அவர்களது பகுதியில் உள்ள தேவைகள் குறித்து கண்காணிப்புக் குழு தலைவரிடம் தெரிவித்தனர்.

அவற்றை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, சாலை பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற தொகுதி குழுக்கூட்டம் நடைபெற்றது.

விபத்துகளை தடுக்க ஆலோசனை

இக்கூட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ராமலிங்கம் வழங்கினார்.

இக்கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்