மாவட்ட சிலம்ப போட்டி

பாவூர்சத்திரத்தில் மாவட்ட சிலம்ப போட்டி நடைபெற்றது.;

Update: 2023-08-08 19:00 GMT

பாவூர்சத்திரம்

பாவூர்சத்திரத்தில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் பாவூர்சத்திரம் அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தொழிலதிபர் ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். உலக சிலம்பம் விளையாட்டு சங்க நிறுவன தலைவர் டாக்டர் கே. சுதாகரன், திரைப்பட இயக்குனர் அம்மாவிஜய், நடிகர் அம்பேத்கர், தனபால், பாலசுப்பிரமணியன், முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுகளை தென்காசி உலக சிலம்பம் விளையாட்டு சங்க தலைவர் சத்தியசீலன், செயலாளர் சுதர்சன், சங்க நிர்வாகிகள் கோபி, ஜெயராஜ், சுந்தர் ஆகியோர் செய்து இருந்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்