இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் சிவகங்கை நகர செயலாளர் மருது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி, சிவகங்கை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் குணசேகரன், மாவட்ட செயலாளர் கண்ணகி, துணை செயலாளர்கள் சாத்தையா, கோபால், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டி மீனாள், மாவட்ட தலைவர் மஞ்சுளா மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து வருகின்ற மே 5-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை நடை பயண இயக்கம் நடத்துவது எனவும், மாதர் சங்க இயக்கம் மற்றும் மே தினத்தை சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.