தூத்துக்குடியில் மாவட்ட சதுரங்க போட்டி

தூத்துக்குடியில் மாவட்ட சதுரங்க போட்டி சனிக்கிழமை நடக்கிறது.

Update: 2023-04-05 18:45 GMT

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக செயலாளர் கற்பகவள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சதுரங்க போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சதுரங்க வீரர், வீராங்கணைகளை ஊக்கப்படுத்தும் வகையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடக்கிறது. போட்டிகள் 10 வயதுக்கு உட்பட்டோர், 14 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் ஆகிய மூன்று பிரிவுகளாகப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக நடக்கிறது. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு, மாநில போட்டியில் பங்கு பெறுவதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியாக நடக்கிறது. இதில் வெற்றி பெறும் முதல் 2 மாணவ, மாணவிகள் மாநில போட்டியில் பங்கு பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகின்றன. மாணவ, மாணவிகள் அனைவரும் வயதுக்கான சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். செல்போன் மற்றும் கைக்கெடிகாரம் அரங்கத்துக்குள் கொண்டு வர அனுமதி இல்லை. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும், மாணவர்களுக்கு 10 பரிசுகளும், மாணவிகளுக்கு 10 பரிசுகளும் ஆக மொத்தம் 60 பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட இருக்கிறது.

முன்பதிவு

மேலும் போட்டியில் பங்கேற்க விரும்புகிறவர்கள் ரூ.75 நுழைவு கட்டணம் செலுத்தி பெயரை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி வரை முன்பதிவு செய்யலாம். இந்த நுழைவு கட்டணத்தை www.easypaychess.com மற்றும் www.signinchess.comஆகிய இணையதளங்கள் மூலம் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு சங்கர்- 98658 30030, தர்மராஜ் - 98946 90574, நந்தகுமார் - 98945 42121, சாந்தி-94877 03266 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்