மாவட்ட சதுரங்க போட்டி

மாவட்ட சதுரங்க போட்டி நடைபெற்றது.

Update: 2023-07-17 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் செக்மேட் சதுரங்கக்கழகம் மற்றும் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகமும் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. மொத்தம் 5பிரிவாக நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். தொடக்க விழாவிற்கு செக்மேட் சதுரங்க கழக தலைவர் ராமு வரவேற்றார். சிவகங்கை மாவட்ட சதுரங்க கழக துணைத்தலைவர் சேவு.முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில சதுரங்க கழக இணைச்செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார். காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ., மாங்குடி, நகர் மன்ற தலைவர் முத்துத்துரை ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வட்ட சதுரங்க கழக பொருளாளரும், கவுன்சிலருமான பிரகாஷ், மாவட்ட கூடுதல் செயலர் பிரகாஷ்மணிமாறன், காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் குமரேசன், மாவட்ட சதுரங்கக் கழக துணைச் செயலர் சேகர், துணைப் பொருளாளர் மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை காரைக்குடி மகரிஷி மெட்ரிக் பள்ளி தட்டிச் சென்றது. முடிவில் செக்மேட் சதுரங்க கழக செயலர் ராஜ் நிர்மல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்