மாவட்ட வேளாண்மை உற்பத்தி குழு கூட்டம்

மயிலாடுதுறையில் மாவட்ட வேளாண்மை உற்பத்தி குழு கூட்டம் நடந்தது

Update: 2023-04-01 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை உற்பத்தி குழு ஆய்வுக் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு, பயிர் சாகுபடி விவரம், 2022-23, 2023-24-ம் ஆண்டு குறுவை பருவத்திற்கு தேவைப்படும் விதை நெல் விவரம், 92 ஆயிரத்து 500 குறுவைப் பரப்பு ஏக்கருக்கு மொத்த விதை தேவை, மாவட்ட மொத்த விதை இருப்பு, உரம், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் இருப்பு விவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-2022 துறை வாரியான நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினம், 2021-22-ம் ஆண்டிற்கான செலவிடாத தொகை நிதி ஒதுக்கீடு, 2022-23 மத்திய அரசு பங்களிப்புடன் கூடிய திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆலோசனை நடத்தி விவசாயிகளுக்கு இத்திட்டங்கள் அனைத்தும் கொண்டு சேர்க்க அலுவலர்களிடம் ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்