மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆரணியில் நடந்தது.

Update: 2023-01-29 14:14 GMT

ஆரணி

சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட கிளையின் நிர்வாகிகள் ஆலோசனை  கூட்டம் ஆரணி காந்தி ரோட்டில் உள்ள கணேஷ் மஹாலில் நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட கவுரவ தலைவர் லோகநாதன், மாவட்ட செயலாளர் எல்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் எஸ்.அப்துல்ரஷீத் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் கே.பத்மநாபன், மாநில பொருளாளர் சுந்தர்ராஜ், மாநில துணைத்தலைவர் சத்தியமூர்த்தி, இணை தலைவர் ஜெகநாதன், மாநில செயற்குழு தலைவர் ஆறுமுகம், மாநில துணை செயலாளர் என்.செல்வம்,

இணை செயலாளர் எம்.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு சங்க உறுப்பினர்களுக்கு காப்பீடு சான்றுகளையும், அடையாள அட்டைகளையும் வழங்கி பேசினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்