மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஆய்வு
மயான பாதைக்கு இடம் கையகப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஆய்வு செய்தார்.
நெமிலியை அடுத்த திருமால்பூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நீண்ட நாட்களாக மயான பாதை அமைக்ககோரி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி நேற்று திருமால்பூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதிக்கு மயான பாதைக்கு இடம் கையகபடுத்துவது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ராஜலட்சுமி, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, திருமால்பூர் கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.