அரசு பள்ளி மாணவர்களுக்கு வல்லாரை மாத்திரைகள் வினியோகம்

கம்பம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு வல்லாரை மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2023-03-10 19:00 GMT

கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வல்லாரை மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜ்தீன் மாணவ, மாணவிகளுக்கு வல்லாரை மாத்திரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், தற்போது பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் வகையிலும், மன பதற்றத்தை குறைக்கும் வகையில் வல்லாரை மாத்திரை வழங்கப்படுகிறது. இதை உட்கொள்வதால் மூளை மற்றும் நரம்புகளில் பதற்றத்தை குறைத்து மன அமைதியை உண்டாக்குகிறது. இதனால் மாணவர்கள் பதற்றமின்றி தேர்வினை எதிர்கொள்ள முடியும். மேலும் இந்த மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என்பதால் அனைவரும் உட்கொள்ளலாம் என்றார்.

இதேபோல் சுருளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் வல்லாரை மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்