விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம்

கோவில்பட்டி, குலசேகரன்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனுஸ்மிருதி புத்தகத்தை பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர்.

Update: 2022-11-06 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி, குலேசகரன்பட்டினத்தில் பொதுமக்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனுஸ்மிருதி புத்தகத்தை வினியோகம் செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள்

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் இலவசமாக மனுஸ்மிருதி புத்தகத்தை வினியோகம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற தொகுதி செயலாளர் முருகன், வழக்கறிஞர் அணி மாநில துணை அமைப்பாளர் பெஞ்சமின் பிராங்கிளின், மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல், ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்டர் மோகன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் விஜயா அந்தோணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்ப்பரிதி தலைமையில் குலசேகரன்பட்டினம் பஜார் பகுதி, மாடசாமி புரம், மங்களாபுரம், மணப்பாடு மலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் மனு ஸ்மிருதி புத்தகம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அரசூர் ராஜ்குமார், செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து, உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட்ஜான்வளவன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோனி ராஜ், மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகேசன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்