50 சதவீத மானியத்தில் விதை நெல்- உரங்கள் வினியோகம்

வேளாண் விரிவாக்க மையங்களில் 50 சதவீத மானியத்தில் விதை நெல்-உரங்கள் வினியோகம் செய்யப்படுகிறது என நன்னிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்(பொறுப்பு) சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-19 18:45 GMT

நன்னிலம்:

வேளாண் விரிவாக்க மையங்களில் 50 சதவீத மானியத்தில் விதை நெல்-உரங்கள் வினியோகம் செய்யப்படுகிறது என நன்னிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்(பொறுப்பு) சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சம்பா சாகுபடி

நன்னிலம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை விரிவாக்க மையங்களில் சம்பா சாகுபடிக்கு தேவையான விதை நெல் எடி.டி 51,சி ஆர் 1009 சப்1, ஆதாரநிலை 1 போன்ற நீண்ட கால நெல் விதைகள் நன்னிலம் வட்டாரம் பகுதிகளான மூங்கில்குடி, ஸ்ரீவாஞ்சியம், பேரளம், பாவட்டகுடி ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

சம்பா சாகுபடிக்கு தேவையான உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. உயிர் உரங்கள்

50 சதவீத மானிய விலை

அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, அசோபாஸ், டிரைக்கோடர்மா விரிடி, சூடோமோனஸ் மற்றும் நெல் நுண்ணூட்டம் (ஏக்கருக்கு 5 கிலோ) ஆகியவற்றில் போதிய அளவில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் விவசாயிகளுக்கு தேவையான தார்பாலின் தென்னை நுண்ணோட்டம் வேளாண் உபகரண தொகுப்பு மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களான தூய மல்லி, கிச்சடி சம்பா, மாப்பிள்ளை சம்பா ஆகிய விதை நெல்கள் ( 25 கிலோ) 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 50 சதவீத மானியத்தில் விதை நெல்கள், உரங்கள் வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்