தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம்

கடையநல்லூரில் பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

Update: 2023-04-08 20:52 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஆவின் ஆறுமுகம் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு தி.மு.க. அரசின் சாதனைகள் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்