புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2023-01-11 17:26 GMT

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து புணர்வு உறுதிமொழியை, நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா தலைமையில் தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றனர். பின்னர் பஸ் நிலையத்தில் இருந்து புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து துண்டு பிரசுரங்களை நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய பாய், தலையணை மற்றும் துணிகளை யாரும் எரித்து போகி கொண்டாட வேண்டாம், அதற்கு பதில் தங்களிடம் உள்ள பழைய துணி மற்றும் பாய் தலையணைகள் தூய்மை காவலர்களிடம் வழங்க வேண்டும், என கூறினார். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் சபியுல்லா, நகராட்சி கவுன்சிலர்கள் கே.ஆர்.ராஜேந்திரன் என்ற வெள்ளை ராஜா, ஆர்.கோமதிராஜா, உள்பட பலரும் கலந்து கொண்டனர். பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பொது மக்களிடம் இருந்து பழைய பொருட்களை தூய்மை காவலர்கள் சேகரித்தனர். நிகழ்ச்சியில் தூய்மை காவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் துப்புரவு அலுவலர் இளங்கோ நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்