பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வினியோகம்

தூத்துக்குடிமாவட்டத்திள்ள பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2022-06-24 14:18 GMT

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு பெற்றோருடன் குவிந்து தற்காலிக மதிப்பெண் பட்டியலை வாங்கி சென்றனர்.

18 ஆயிரம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிகள் கடந்த 20-ந் தேதி வெளியிடப்பட்டன. மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 8 ஆயிரத்து 900 மாணவர்கள், 10 ஆயிரத்து 473 மாணவிகள் ஆக மொத்தம் 19 ஆயிரத்து 373 பேர் எழுதினர். இதில் 8 ஆயிரத்து 380 மாணவர்கள், 10 ஆயிரத்து 303 மாணவிகள் ஆக மொத்தம் 18 ஆயிரத்து 683 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

மதிப்பெண் பட்டியல் வினியோகம்

அதன்படி பள்ளிக்கூடங்களில் தற்காலிக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மதிப்பெண் பட்டியலில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன.

இதனால் நேற்று பள்ளிக்கூடங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் அதிக அளவில் வந்து இருந்தனர். இந்த பணிகள் முடிவடைந்த பிறகு அரசு தேர்வுத்துறை மூலம் இறுதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்