திருமண மண்டபத்தில் மது விநியோகம் - சட்டத்திருத்தம் நீக்கம்
திருமண மண்டபத்தில் மதுபான விருந்து நடத்தலாம் என்ற அரசாணை நீக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வணிகப்பகுதிகள் இல்லாத இடங்களில் மதுபானம் பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் நீக்கப்பட்டுள்ளது. சிறப்பு உரிமம் வழங்குவதற்கான அறிவிக்கை நீக்கம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச விளையாட்டு போட்டிகளின்போது மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கப்படும். மார்ச் 18ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் அனுமதி பெற்ற மது பரிமாற வெளியிடப்பட்ட அரசாணைக்கு எதிர்ப்பு எழுந்தது.