பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க துண்டு பிரசுரங்கள் வினியோகம்

கீழ்பென்னாத்தூரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க துண்டு பிரசுரங்கள் வினியோகம்;

Update: 2022-07-10 14:12 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் நகரை சுத்தமாக வைத்திருக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சாலையோர கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

பேரூராட்சி தலைவர் சரவணன் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அப்போது பேரூராட்சி இளநிலை உதவியாளர் தனமல்லி, கவுன்சிலர் பாக்கியராஜ், கணினி இயக்குனர் சுரேஷ், பணியாளர்கள் முத்து, சுதா மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்