தசரா பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில் வினியோகம்
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் தசரா பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில் வினியோகம் செய்யப்பட்டது.;
உடன்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பக்தர்களுக்கு 50 ஆயிரம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்டெர்லைட் நிறுவன முதன்மை செயலர் சுமதி தலைமை தாங்கினார். நிறுவன பொதுமேலாளர்கள் சக்திவேல், சுந்தர்ராஜ், சமூக நலப்பணித் தலைவர் சுந்தர்ராஜ், உதவி மேலாளர் ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பக்தர்களுக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 50 ஆயிரம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் நிறுவன பணியாளர்கள் தியாகராஜன், சோமசுந்தரம், பாலசுப்பிரமணியன், ஜிந்தா, சுடலை, அருண்ராம்தாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.