டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்
சேரன்மாதேவியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் நடந்தது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே டெங்கு காய்ச்சல் கொசுப்புழு தடுப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்குதல் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், பேரூராட்சி மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பத்தமடை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரமேஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். சேரன்மாதேவி பேரூராட்சி செயல் அலுவலர் காதர், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், பூங்கொடி, மருத்துவ மேற்பார்வையாளர் செய்யது சுலைமான், சேரன்மாதேவி பேரூராட்சி கவுன்சிலர் முருகன் ரவிச்சந்தர், கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். தன்னார்வ தொண்டர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.