பொதுமக்களுக்கு மஞ்சப்பை வினியோகம்

ஓவேலி பேரூராட்சியில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2022-09-11 14:51 GMT

கூடலூர், 

ஓவேலி பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில், திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கில் குப்பைகள் தரம் பிரித்தல், உரமாக்குதல் குறித்து செயல் அலுவலர் ஹரிதாஸ் பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு உரம் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. தொடர்ந்து பார்வுட், பெரியார் நகர் மற்றும் காந்தி நகர் பகுதியில் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, துணைத் தலைவர் சகாதேவன் உள்பட உறுப்பினர்கள், பொதுமக்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்