முதல் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வினியோகம்

முதல் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வினியோகம்

Update: 2023-06-09 18:45 GMT

கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பனில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் புதிதாக சேர்க்கப்பட்ட முதல் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடு மற்றும் ஆசிரியர்களுக்கான கையேட்டினை திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வழங்கினார். இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலசுப்ரமணியன், வட்டார கல்வி அலுவலர்கள் விமலா, சுமதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்