மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பம் வினியோகம்
வி.ஐ.டி. பல்கலைக்கழக அனைவருக்கும் உயர் கல்வி திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டது.
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர் கல்வி திட்டம் என்ற அறக்கட்டளை மூலம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுடைய உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2023 கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை பெறுவதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான விண்ணப்பத்தினை அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை உறுப்பினர் கே.எம்.தேவராஜ் மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் உயர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.