மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

தலைஞாயிறு அருகே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

Update: 2023-04-19 18:45 GMT

வாய்மேடு:

தலைஞாயிறு ஒன்றியம் வாட்டாகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நீலமேகம் தலைமை தாங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் மற்றும் ஆசிரியர்கள்ஆகியோர் வாட்டாக்குடி பகுதியில் வீடு வீடாக சென்று, தங்கள் பள்ளியில் உள்ள வசதிகள், கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்