வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் தகராறு; 10 பேர் மீது வழக்கு

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் தகராறு செய்தது தொடர்பாக வாலிபர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-06-05 20:22 GMT

சோமரசம்பேட்டை:

சோமரசம்பேட்டை அருகே உள்ள ராம்ஜிநகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு அரியாவூரை சேர்ந்த பாண்டியன்(வயது 30) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டிவந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். மேலும் அவர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாண்டியன் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து வடக்கு அரியாவூரை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பாண்டியன் உள்பட 10 பேர் மீது ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்