அரசு பஸ் டிரைவரிடம் தகராறு

அரசு பஸ் டிரைவரிடம் தகராறு செய்தவர் கைது

Update: 2022-05-30 20:14 GMT

ஒரத்தநாடு

ஒரத்தநாடு அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (வயது 45). இவர், சம்பவத்தன்று ஆயங்குடி கிராமத்திலிருந்து மெயின் சாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த முனியன், பஸ் டிரைவர் கண்ணனிடம் தகராறு செய்து அவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்