கார் வாங்கியது தொடர்பாக தகராறு:ராணுவ வீரர் மீது வழக்கு

கம்பத்தில் கார் வாங்கியது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக ராணுவ வீரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-12-26 18:45 GMT

கம்பம் கம்பம்மெட்டு காலனி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 36). அதே தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (39). ராணுவ வீரர். இருவரும் உறவினர்கள் என்பதால் தினேஷ், தமிழ்செல்வனிடம் ராணுவ கேன்டீனில் கார் வாங்கி தருவதாக கூறினார். அதன்படி, அவர் கார் வாங்கி கொடுத்தார். அதற்கு தமிழ்செல்வன், தினேஷ் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த தினேஷ் எனது பெயரில் கார் உள்ளதால் திருப்பி தருமாறு கேட்டு தமிழ்செல்வனிடம் தகராறு செய்தார். இதுகுறித்து அவர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் தினேஷ் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்