நிலத்தை பாகம் பிரிப்பதில் தகராறு

விழுப்புரம் அருகே நிலத்தை பாகம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-09-16 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 37). இவரும் ரமேசும்(40) அண்ணன், தம்பிகள் ஆவர். இவர்களுக்குள் பூர்வீக நிலம் 25 செண்ட்டும், 4½ செண்ட் வீட்டுமனையும் உள்ளது. இதை பாகம் பிரிப்பதில் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், இவரது மனைவி தனலட்சுமி, சேகர் மனைவி பாஞ்சாலி ஆகியோர் சேர்ந்து சுரேசை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ் உள்ளிட்ட 3 பேர் மீதும் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்