பணம் கேட்டு தகராறு; வாலிபர் கைது
பணம் கேட்டு தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வடக்கன்குளம்:
பழவூர் அருகே தெற்கு கருங்குளத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 25). இவருடைய மனைவி முத்துலட்சுமி (24). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் பாலகிருஷ்ணன், முத்துலட்சுமியிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பழவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணனை கைது செய்தார்.