பணம் கேட்டு தகராறு: மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

பணம் கேட்டு தகராறு: மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

Update: 2022-11-07 18:45 GMT

கோட்டூர்

கோட்டூர் அருகே உள்ள சோமந்துறைசித்தூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அனிதா (26). இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் குழந்தை பெற்றதற்காக அரசிடம் இருந்து ரூ.16 ஆயிரம் உதவித்தொகை வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மது அருந்தி விட்டு வந்து அந்த பணத்தை கேட்டு ரமேஷ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அனிதாவை அவர் தகாத வார்த்தையால் திட்டி தென்னை மட்டையால் அடித்து காயப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்