இடப்பிரச்சினையில் தகராறு; விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மீது வழக்கு

இடப்பிரச்சினையில் தகராறு; விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-09-26 18:02 GMT

ஆவுடையார்கோவில்:

ஆவுடையார்கோவில் அருகே கருப்பூர் கிராமம் ஜீவா நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 46). அதேபகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய பிரிவு துணை செயலாளராக உள்ளார். இந்நிலையில், இளங்கோவன் இடத்தில் கண்ணன் விறகுகளை போட்டு வைத்துள்ளார். இதனால் அந்த விறகுகளை அப்புறப்படுத்துமாறு அவர் கூறியுள்ளார். அதற்கு கண்ணன் தனக்கு ெசாந்தமான இடத்தில் விறகுகளை போட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இளங்கோவன் ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்